How to Find Lost Phone in Tamil:
rawpixel / Pixabay
செல்போன் காணாமல்போகும் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் இந்தியாவில் இதன் விழுக்காடு மிகவும் அதிகம்.
சில நேரங்களில் நமது செல்போன் திருட்டுப்போகலாம். சிலவேளைகளில் நாமேகூட தொலைத்துவிடலாம். சாதாரண போனாக இருந்தால்கூட போனால்போகட்டுமென விட்டுவிடலாம்.
சாதாரண போன்களிலும் முக்கியமான தகவல்கள் இருந்தால் என்னசெய்வது? இல்லை, விலையுயர்ந்த செல்போனாக இருந்தால் என்னசெய்வது?. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்!
புதிதாக செல்போன் வாங்கினால் முதலில் உங்களுடைய போனின் IMEI எண்னை மறக்காமல் எழுதிவையுங்கள். இது போனானது தொலைந்தாலோ அல்லது திருட்டுப்போனாலோ கண்டிப்பாக உதவும்.
காணாமல்போன போன்களை எளிதாக கண்டறிய சில அப்ளிகேசன்களை இங்கே கொடுத்துள்ளோம். நீங்களே பாருங்கள்.
IMEI
எந்த போன் வாங்கினாலும் அதில் IMEI என அழைக்கப்படும் ஒரு எண் தரப்படும். 15 இலக்கம்கொண்ட இந்த எண்ணானது பத்திரப்படுத்தி வைக்கவேண்டியது.
போனில் *#06# என டைப்செய்தாலே இது நமக்குக்கிடைக்கும். உங்களது போன் தொலைந்தாலோ அல்லது திருட்டுப்போனாலோ முதலில் FIR கொடுக்கவேண்டும். அப்பொழுது இந்த எண்ணையும் கொடுக்கவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
அவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி:
மொபைல் பாதுகாப்பிற்கு உதவும் இந்த அப்ளிகேசனானது 2 வேலைகளுக்கு உதவும். ஒன்று மொபைலுக்கு வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும். மற்றொன்று தொலைந்துபோனாலோ அல்லது திருட்டுப்போனாலோ SMS அல்லது இணையச்சேவையை பயன்படுத்தி நமக்குத்தெரியப்படுத்தும்.
மொபைல் சேஸ்-லொகேஷன் டிரேக்கர்:
இதுவுமொரு சிறந்த அப்ளிகேசனாகும். உங்களது போனை திருடியவர் புதிதாக சிம் போட்டாலே ஏற்கெனவே பதியப்பட்டுள்ள உங்களது எண்ணுக்கு SMS வசதி மூலமாக தெரியப்படுத்திவிடும். இதில் இதில் GPS தகவல்களும் தெரிந்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு!
இதை தரவிறக்கம் செய்ய,
தீஃப் டிரேக்கர்:
அருமையான அப்ளிகேசன். உங்களது ஸ்மார்ட்போன் ‘லாக்’ செய்யப்பட்டிருந்தால் அதை விடுவிக்கும்பொழுது தவறுநேர்ந்தால் உடனே இந்த அப்ளிகேசனானது அவருடைய முகத்தை படமெடுத்து ஈமெயில் மூலமாக உங்களுக்கு அனுப்பிவிடும்.
இதை தரவிறக்கம் செய்ய.
ஸ்மார்ட் லாக்:
இதுவும் திருடனை படமெடுத்து ஈமெயில் வாயிலாக உங்களுக்கு அனுப்பவல்லது. மேலும் இந்த அப்ளிகேசனில் GPS தகவல்கள் உடனுக்குடன் சேமிக்கப்படும். கடைசியாக போனை எங்கே தொலைத்தீர்கள் என்ற விவரத்தை எளிதில் பெறமுடியும்.
ஏன்டி-தெப்ட் அலாரம்:
இந்த அலாரத்தை ‘ஆன்’ செய்து குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு செல்கிறீர்கள் என்றால், எவராவது போனை தொட்டாலே இது தானாகவே ‘கத்த’ ஆரம்பித்துவிடும். இந்த அலாரத்தை நிறுத்த சரியான கடவுச்சொல்லை உள்ளிடவேண்டும்.
கேஸ்பர்ஸ்கி மொபைல் செக்யூரிட்டி:
இதுவொரு மிகச்சிறந்த அப்ளிகேசன். பயன்படுத்தினால் தான் இதன் அருமைதெரியும்.
லுக்அவுட் செக்யூரிட்டி மற்றும் ஏன்டிவைரஸ்:
இதுவொரு இலவச மென்பொருளாகும். இது லுக் அவுட்.காம் இணையத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது.
ட்ரென்ட் மைக்ரோ மொபைல் செக்யூரிட்டி:
மிகச்சிறந்த அப்ளிகேசன். ஆனால் பணம் கொடுத்துதான் வாங்கவேண்டும். 30 நாட்களுக்கு வேண்டுமானால் இலவசமாகவே பயன்படுத்தலாம்.
பயன்படுத்த இங்கே அழுத்தவும்.
பிளான் பி லுக்அவுட் மொபைல் செக்யூரிட்டி:
இதுவும் முன்னர் பார்த்தோமல்லவா? அதே லுக்அவுட் அப்ளிகேசனின் இரண்டாம் பதிப்பு. இதுவுமொரு நல்ல அப்ளிகேசன்.
தரவிறக்கம் செய்ய.