TNPSC Group 4 Model Question and Answer Part 3
விருந்தே புதுமை எனக் கூறியவர் யார் ?
Ans : தொல்காப்பியர்
இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் ஒரு பெண் என கூறியவர் யார் ?
Ans : திருவள்ளுவர்
கல்வியும் செல்வமும் பெற்ற கண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிடுவர் யார் ?
Ans : கம்பர்
எது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை என்று புறநானூறு பாடல் கூறுகிறது ?
Ans : தனித்து உண்ணாமை
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்று குறிப்பிடும் நூல் எது ?
Ans : நற்றிணை
காலின் ஏழடி பின் சென்று என்று குறிப்பிடும் நூல் எது ?
Ans : பொருநராற்றுப்படை
இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக எனத் துவங்கும் புதுக்கவிதையை எழுதியவர் யார் ?
Ans : அம்சப்பிரியா
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று ஒளவையார், கொன்றைவேந்தன் என்ற நூலில் பாடியுள்ளார்.
வழிப்போக்கர்களுக்காக மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டது யாருடைய ஆட்சிக்காலத்தில் ?
Ans : நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள்
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா எது ?
Ans : வாழை இலை விருந்து விழா
காசி காண்டத்தை எழுதியவர் யார் ?
Ans : அதிவீரராம பாண்டியர்.