முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் தமிழ் விமர்சனம்:
நடிகர்சாந்தனு ,நடிகைஅதுல்யா, இயக்குனர்ஸ்ரீஜர், இசை தரண்குமார், ஓளிப்பதிவு ரமேஷ் சக்ரவர்த்தி.
இந்தப் படத்தில் சாந்தனுவுக்கும் அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களுடைய முதலிரவு நடைபெறுவதற்கு முன்னதாக சாந்தனுவின் தாத்தா பாக்கியராஜ் உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தால் என்னுடைய சொத்து முழுவதையும் அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்து விடுவேன் என்று சொல்லிவிடுகிறார். மேலும் நீங்கள் இருவரும் இந்த முதல் ராத்திரியில் தூங்காமல் இருக்க வேண்டும் காலைவரை என்று கூறுகிறார்.
அதுல்யா அத்தை ஊர்வசி அவர்கள் உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தே ஆக வேண்டும் அப்படி இல்லையென்றால் குழந்தை பிறக்காது என்று தோஷம் இருப்பதாக சோசியர் கூறியிருக்கிறார் என்று சொல்லிவிடுவார். இவர்கள் இருவரும் கூறியதற்கு அடுத்து சாந்தனு விற்கும் அதுல்யா ரவிக்கும் முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தில் உள்ள மீதி கதையாகும்.
படத்தின் கதாநாயகன் சாந்தனு அவர் நடித்த அனைத்து காட்சிகளிலும் துருதுருவென்று நடித்திருக்கிறார் மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றிருக்கிறார். அதே போன்று படத்தின் கதாநாயகி அதுல்யா ரவி அவருடைய துள்ளலான நடிப்பில் ரசிகர்களின் மனதை ஆழமாக கவர்ந்திருக்கிறார். இந்த படத்தில் இவர்களின் ஜோடி படத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. மேலும் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு மற்றும் முனிஸ்காந்த் என்று பலர் நடித்திருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு கொடுத்த காட்சிகளை அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்து காட்டி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் முக்கியமான கதை என்னவென்றால் முதலிரவு நடப்பது பற்றி தான் அதனை வைத்து இயக்குனர் ஸ்ரீஜர் படத்தை முழுக்க முழுக்க ஒரே இரவில் எடுத்திருக்கிறார். படத்தில் இரட்டை அர்த்த வசனங்களை அதிகமாக வைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக எண்ணி கொஞ்ச இடங்களில் மட்டுமே நகைச்சுவை செட் ஆகி இருக்கிறது. பழைய படங்களில் இருந்து பல வசனங்களை எடுத்திருப்பதால் இந்த படத்திற்கு அது மிகவும் சூட் ஆகி இருக்கிறது.
தரண் குமார் இசையில் அனைத்து பாடல்களும் மக்களின் மனதில் ரசிக்கும்படி இருந்தது. ரமேஷ் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு ஓடு படங்கள் அனைத்தும் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.
முருங்கக்காய் சிப்ஸ் படத்தை மொத்தத்தில் எப்படி கூற வேண்டும் என்றால் ஓரளவுக்கு பார்க்கலாம் என்று தான் சொல்ல வேண்டும். குடும்பமாக சென்று பார்ப்பது கொஞ்சம் கடினம் தான்.