Jurassic World Dominion தமிழ் திரை விமர்சனம் :
Director : Colin Trevorrow
Distributed by : Universal Pictures
Starring : Chris Pratt , Bryce Dallas Howard, Laura Dern , Jeff Goldblum.
மனிதர்களும் டைனோசர் படம் இணைந்து வாழும் ஒரு பயோசின் சரணாலயம் ஒன்று இருக்கிறது. அங்குள்ள பலர் இயற்கை சமநிலை அழிக்கும் வகையிலும் உலகம் முழுவதும் உணவு வறட்சியை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகளின் மரபணு மாற்றத்தை ஏற்படுத்திய அதனை அவிழ்த்து விடப்படுகிறார்கள். அதனால் இந்த டிஎன்ஏ மாதிரியே கைப்பற்ற பயோசின்னுக்குள் டாக்டர் எல்லிசாட்லர் மற்றும் டாக்டர் ஆலன் வருகிறார்கள்.
மற்றொரு புறத்தில் ஓவன் மற்றும் கிளாரி கடத்தப்பட்ட தங்களது மகளுக்காக பயோசின் வருகிறார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் அந்த வேலை நடந்ததா அல்லது அங்கிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை யாகும்.
2018 ஆம் ஆண்டு வெளியான ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் இரண்டாம் பாகமாக ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் கதையை மிகவும் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். திரைப்படத்தின் கதாநாயகன் கிறிஸ் பிராட் கதையில் மிகவும் அற்புதமாக மிரட்டியிருக்கிறார். அவர் டைனோசர் இடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளும் மற்றும் bike மூலமாக டைனோசர் இடம் இருந்து தப்பித்த காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருக்கு ஜோடியாக நடித்த பிரைஸ் டல்லாஸ் தனியாக காட்டில் சிக்கிக் கொண்ட போது அவருடைய பயத்தின் காட்சியையும் மற்றும் பல்வேறு பதற்ற காட்சிகளையும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
இளம் நாயகியாக நடித்திருந்த பெண் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது அவளையும் சின்ன டைனோசரின் கடத்திச் செல்வார்கள். அவர்கள் இருவரும் பயோசின் அடைத்து வைத்திருப்பார்கள். அப்போது அங்கு வரும் எல்லிசாட்லர் மற்றும் டாக்டர் ஆலன் இருவரும் வெட்டுக்கிளி டிஎன்ஏ எடுக்க ஒரு ரூம்க்கு செல்வார்கள். ஆனால் அங்கு இருக்கும் வெட்டுக்கிளிகள் அவர்களை தாக்க ஆரம்பித்துவிடும் வலிதாங்க முடியாமல் இருவரும் வெளியே வந்துவிடுவார்கள். அதனை அந்த சிறுமியை பார்த்து விடுவது அதன் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து அங்கு இருந்து தப்பிக்க வழி செய்வார்கள்.
மற்றொரு பக்கம் தனது மகனை காப்பாற்றுவதற்காக உள்ளே நுழைந்த தாய் மற்றும் தந்தையை ஒரு பெண் டைனோசர் வைத்து கொலை செய்ய முயற்சி செய்வாள். அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு பெண்ணின் உதவியால் ஏரோபிளேன் மூலமாக மக்களை காப்பாற்றுவதற்காக செல்வார்கள். ஏரோபிளேன் போகும்போது விபத்துக்கு உள்ளாகும் நேரத்தில் ஒரு பாராசூட் மட்டுமே இருக்கும். உடனே அதிலிருந்து ஹீரோயின் மட்டும் வெளியே செல்வார். அந்த ஹீரோயின் காட்டில் தனியாக மாட்டிக் கொண்டு விடுவார். மற்ற இருவர்களும் ஏரோப்ளேன் வெடித்து ஒரு பணி பகுதியில் மாட்டிக் கொள்வார்கள். இறுதியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து டைனோசர் இடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் கதை. இறுதியில் இரண்டு டைனோசர்கள் சண்டை போடும் காட்சி படத்தில் பக்கபலமாக இருந்தது.
படத்தில் முதல் பாகம் ஸ்லோவாக சென்றாலும் இரண்டாம் பாகம் நல்ல விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. இயக்குனர் இரண்டாம் பாகத்தில் விருவிருப்பான காட்சிகளை கொண்டு வந்ததால் படம் நன்றாக இருந்தது. படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் பல காட்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது அதுவும் ஹீரோயின் தண்ணீரில் மூழ்கி இருந்த போது அந்த காட்சி நன்றாக இருந்தது.
உலகம் என்பது அனைவரும் வாழும் ஒரு பகுதியாக அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களும் வாழலாம் என்ற கருத்து கூறியிருக்கிறார்கள். ஜுராசிக் வேர்ல்டு டொமினியன் திரைப்படம் பார்வையாளருக்கு ஏமாற்றம் கொடுக்காமல் நன்றாக இருக்கிறது.